சுட்ட கதை பிரச்சனை.. தளபதி 63க்கு தடை விதிக்க நீதிமன்றத்தில் வழக்கு!!!

Webdunia
வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (15:23 IST)
தளபதி 63 படத்தின் கதை தன்னுடையது என்றும் அந்த படத்திற்கு தடை விதிக்க கோரியும் குறும்பட இயக்குனர் செல்வா என்பவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
 
வழக்கமாக அட்லீ இயக்கிய படங்கள் வெளியான பின்பு பழைய படங்களை காப்பி செய்துவிட்டார் என்கிற விமர்சனம் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால், இந்த முறை படம் வெளியாகுவதற்கு முன்பே தளபதி 63 படத்தை என்னுடைய கதையை வைத்துதான் இயக்குகிறார் என்று குறும்பட இயக்குனர் செல்வா அட்லீ மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். 
 
இதேபோல் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி தான் 256 பக்க கதையை எழுதியதாகவும், அதனை சில தயாரிப்பு நிறுவனங்களிடம் காண்பித்ததாகவும் கூறியுள்ளார். ஆகவே இயக்குனர் அட்லி, படத்தின் தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், படத்திற்கு தடை விதிக்க கோரியும் செல்வா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
இந்த வழக்கானது ஏப்ரல் 23ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் சர்கார் பட ரிலீசின் போதும் இதே மாதிரியான பஞ்சாயத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்