பிரபுதேவாவை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்

Webdunia
புதன், 10 மே 2017 (11:11 IST)
கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் அடுத்த படத்தில், பிரபுதேவா ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

 
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘இறைவி’ படம் ரிலீஸாகி ஒரு வருடம் ஆகப் போகிறது. ஆனாலும், அடுத்த படத்துக்கான பூஜையைக் கூட அவரால் போட முடியவில்லை. காரணம், தனுஷ். ‘அடுத்த படத்துல நடிக்கிறேன் ப்ரதர்’ என்று கார்த்திக்  சுப்பராஜிடம் வாக்கு கொடுத்திருந்தார் தனுஷ். அதை நம்பிய கார்த்திக் சுப்பராஜும் மாதக் கணக்கில் காத்திருந்தார்.
 
சொன்ன சொல்லைக் காப்பாற்ற ‘தவசி’ விஜயகாந்தா சினிமாக்காரர்கள்? ‘இதோ… அதோ…’ என தனுஷ் இழுத்துக்கொண்டே  போக, ஒருகட்டத்தில் கடுப்பாகிவிட்டார் கார்த்திக் சுப்பராஜ். இத்தனைக்கும், நடிப்பு, இயக்கம் என மற்றவர்களுக்கு மட்டும்  வெண்ணெய் தடவிய தனுஷ், கார்த்திக் சுப்பராஜுக்கு மட்டும் சுண்ணாம்பைத் தடவி வந்தார்.
 
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கார்த்திக் சுப்பராஜ், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார். கன்னட நடிகையான சம்யுக்தா ஹெக்டே, பிரபுதேவா ஜோடியாக நடிக்கிறார். விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க  இருக்கிறது.
அடுத்த கட்டுரையில்