ரஜினிக்கு ஜோடியாகும் தனுஷ் பட ஹீரோயின்?

Webdunia
புதன், 10 மே 2017 (10:28 IST)
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில், தனுஷ் படத்தின் ஹீரோயின் நடிக்கலாம் எனத் தகவல்  கிடைத்துள்ளது.

 
 
தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில், முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார் கஜோல். ஹீரோயின் அமலா  பாலைவிட முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் அவருக்கு. 20 வருடங்களுக்கு முன்பு ‘மின்சார கனவு’ படத்தில் நடித்த கஜோல், மறுபடியும் தமிழில் எண்ட்ரியாகும் படம் இது. இந்தப் படத்தில் மிகச்சிறப்பாக நடித்துள்ளாராம் கஜோல்.
 
எனவே, பா.இரஞ்சித் இயக்கும் படத்தில், ரஜினிக்கு ஜோடியாக கஜோலை ஒப்பந்தம் செய்யலாம் என முடிவெடுத்துள்ளாராம்  படத்தைத் தயாரிக்கும் தனுஷ். ‘கபாலி’யைப் போல பாலிவுட் நடிகைதான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம் படக்குழுவினர். எனவே, கஜோலுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். இந்தப் படத்தில்  வித்யா பாலன் நடிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்