பாகுபலிக்காக எடையை கூட்டிக் குறைத்த ராணா

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2016 (14:24 IST)
பாகுபலி இரண்டாம் பாகத்திலும் வில்லனாக தொடர்கிறார் ராணா. வயதான பல்வாள்தேவன் கதாபாத்திரத்துக்காக 110 கிலோவாக உடல் எடையை அதிகரித்தவர், இப்போது இளம் பல்வாள்தேவனுக்காக உடல் எடையை 93 கிலோவாக குறைத்துள்ளார்.


 
 
பாகுபலியில் பிரபாஸுக்கு இணையான வேடம் ராணாவுக்கு. கட்டுமஸ்தான் உடலமைப்பு அதற்கு தேவை. வயதான கதாபாத்திரத்துக்காக உடல் எடையை கூட்டியவர், உடம்பின் முறுக்கு குறையால் இளம் கதாபாத்திரத்துக்கு உடல் எடையை குறைத்துள்ளார்.
 
இந்த வருட இறுதியில் பாகுபலி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் 28 படம் திரைக்கு வருகிறது.
அடுத்த கட்டுரையில்