அமலா பாலிடம் தனது காதலை சந்தர்ப்பம் பார்த்து போட்டுடைத்த ஆர்யா

Webdunia
வியாழன், 2 நவம்பர் 2017 (14:03 IST)
தமிழ் மற்றும் கேரள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலா பால் போலி முகவரி தந்து புதுச்சேரியில் 1  கோடி ரூபாய் மதிப்புடை சொகுசுக் காரை பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் கிரண்பேடி குறிப்பிட்டவாறு  எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார்.

 
இந்நிலையில் நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு அதில், நகர  வாழ்க்கையில் இருந்தும் சர்ச்சைகளிடம் இருந்தும் வெளி வர விரும்புவதாக நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.
 
இதனை தொடர்ந்து அமலா ட்வீடுக்கு பதில் கூறப்போய், கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நடிகர் ஆர்யா அமலா பாலுக்கு  ட்விட்டர் மூலம் ப்ரொபோஸ் செய்துள்ளார் ப்ரொபோஸ் செய்துள்ளார். அதில் ஆர்யா சாலை வரியை மிச்சப்படுத்தினால் படகில்  போகலாம் என்று கலாய்த்திருந்தார். அதற்கு அமலா பால் உடம்பை வருத்தி ஓடி, சைக்கிளிங் செய்து நீங்களும் தானே காசை  சேமிக்கிறீர்கள் என்று அமலா ஆர்யாவை கலாய்த்தார்.
 
பதிலுக்கு ஆர்யா உனக்காக தான் சேமித்துக் கொண்டிருக்கிறேன். காதல் செய் அமலா... என்று தனது காதலை  வெளிப்படுத்தியுள்ளார். ப்ரொபோஸ் செய்துவிட்டார் ஆர்யா. ஆர்யா ப்ரொபோஸ் செய்ததை பார்த்த அமலா பால். கிண்டல்  செய்தது போதும் என்று ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்