நடிகை அமலா பாலை தொடர்ந்து நடிகை நஸ்ரியாவின் கணவரான நடிகர் பகத் ஃபாசில் இதே போல செய்திருப்பது தெரியவந்தது. தற்போது மலையாள சினிமாவின் பிரபல நடிகர் சுரேஷ் கோபி போலி முகவரி கொடுத்து புதுச்சேரியில் கடந்த 2010-ல் ரூ 80 லட்சம் மதிப்புள்ள ஆடி கார் வாங்கி அங்கேயே பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் ரூ 1.5 லட்சம் மட்டுமே செலுத்திவிட்டு, ரூ 13.5 லட்சம் வரி ஏய்ப்பு செய்துள்ளது. இதனால் கேரள அரசு தற்போது இது குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நடிகர் சுரேஷ் கோபி ஐ, அஜித் நடித்த தீனா போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.