முன்னாள் முதல்வருக்கு முதல் பாடல், வருங்கால முதல்வருக்கு கடைசி பாடல்: நெட்டிசன்களின் டுவிட்டுக்கள்

Webdunia
ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (07:45 IST)
முன்னாள் முதல்வருக்கு முதல் பாடல், வருங்கால முதல்வருக்கு கடைசி பாடல்
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் மரணம் அடைந்தது இந்திய இசைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என்று என்ற கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நெட்டிசன்கள் எஸ்பிபி குறித்த பல நினைவுகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஒருசில நெட்டிசன்கள் எஸ்பிபி பாடிய முதல் பாடல் முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்காக பாடினார் என்றும், எஸ்பிபி பாடிய கடைசி பாடல் வருங்கால முதல்வர் ரஜினிக்காக பாடினார் என்றும் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நடித்த ’அடிமைப்பெண்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் தான் எஸ்பிபியின் முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் எஸ்பிபி பாடிய கடைசி பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தில் இடம்பெற்ற அவரது அறிமுக பாடல் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை வைத்துதான் முன்னாள் முதல்வருக்கு முதல் பாடலும் வருங்கால முதல்வருக்கு கடைசி பாடலும் எஸ்பிபி பாடியுள்ளார் என்று கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்