ரஜினியின் ’’அண்ணாத்த’’ பட ஃபர்ஸ்ட் சிங்கில் ரிலீஸ் !

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (18:19 IST)
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் முதல் சிங்கில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு ஒரு சிறப்பு என்னவென்றால் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடிய கடைசி பாடல் இதுதான்.

இந்நிலையில் எஸ்பிபி ரசிகர்கள் அந்த பாடலுக்காக காத்திருக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் சமூகவலைதளங்களில் ஹேஷ்டேக்கையும் உருவாக்கி பரப்பி வந்தனர்.

தற்போது சன்பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அண்ணாத்த பட ஃபர்ஸ்ட் சிங்கிலை வெளியிட்டுள்ளது.  இப்பாடல் ரஜினியின் பக்கா மாஸ் ஓபன்சாங்காக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்