’அண்ணாத்த’ தீபாவளி ரிலீஸ் உறுதி: வேண்டுமென்றே வதந்தி பரப்பு யூடியூப் சேனல்கள்

செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (17:10 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாது என்றும் அந்த திரைப்படம் டிசம்பர் மாதம் அல்லது பொங்கல் தினத்திற்கு தள்ளி போகும் என்றும் தங்களை தாங்களே பத்திரிகையாளர்கள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் யூடியூப் சேனல் களில் உள்ள சிலர் வதந்தியை பரப்பி வருகின்றனர்
 
இந்த நிலையில் படக்குழுவினர்கள் வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின்படி ’அண்ணாத்த’ படம் தீபாவளி ரிலீஸில் இருந்து நிச்சயம் பின்வாங்காது என்றும் திட்டமிட்டபடி கண்டிப்பாக தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
தீபாவளிக்குள் தமிழகத்தில் 100 சதவீத பார்வையாளர்கள் திரையரங்குகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதே போல் அண்டை மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளிலும் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் எனவே திட்டமிட்டபடி ’அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி அன்று ரிலீசாகும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்