பிலிம்பேர் 2023: கமல் முதல் சாய் பல்லவி வரை பெற்ற விருதுகளின் முழுப் பட்டியல்!

vinoth
வெள்ளி, 12 ஜூலை 2024 (17:35 IST)
ஆண்டுதோறும் வழங்கப்படும் பிலிம்பேர் விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. 68 ஆவது பிலிம்பேர் விருதுகள் தென்னிந்தியா சினிமாக்களுக்கு அறிவிக்கப்பட்டுளன. இதில் கமல், தனுஷ்,சாய்பல்லவி  மற்றும் மாதவன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும், பொன்னியின் செல்வன் மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களும் விருதுகளைப் பெற்றுள்ளன.
·         சிறந்த படம் - பொன்னியின் செல்வன் பகுதி 1
·         சிறந்த இயக்குனர் - மணிரத்னம் (பொன்னியின் செல்வன் பகுதி 1)
           சிறந்த திரைப்படம் (விமர்சகர்கள் விருது) - கடைசி விவசாயி
·         சிறந்த நடிகர் - கமல்ஹாசன் (விக்ரம்)
·         சிறந்த நடிகர் (விமர்சகர்கள்) - தனுஷ் (திருச்சிற்றம்பலம்), ஆர். மாதவன் (ராக்கெட்ரி)
·         சிறந்த நடிகை - சாய் பல்லவி (கார்கி)
·         சிறந்த நடிகை (விமர்சகர்கள்) - நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)
·         சிறந்த குணச்சித்திர நடிகர் - காளி வெங்கட் (கார்கி)
·         சிறந்த குணச்சித்திர நடிகை - ஊர்வசி (வீட்ல விசேஷம்)
·         சிறந்த இசை ஆல்பம் - ஏ.ஆர் ரஹ்மான் (பொன்னியின் செல்வன் பாகம் 1)
·         சிறந்த பாடல் வரிகள் - பாடலாசிரியை தாமரை (மறக்குமா நெஞ்சம் - வெந்து தணிந்தது காடு)
·         சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்) - சந்தோஷ் நாராயணன் (தேன்மொழி - திருச்சிற்றம்பலம்)
·         சிறந்த பின்னணிப் பாடகர் (பெண்) - அந்தரா நந்தி (அலைக்கடல்- பொன்னியின் செல்வன் பகுதி 1)
·         சிறந்த அறிமுக நடிகர் - பிரதீப் ரங்கநாதன் (லவ் டுடே)
·         சிறந்த அறிமுக நடிகை - அதிதி சங்கர் (விருமன்)
·         சிறந்த ஒளிப்பதிவு - ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் பகுதி 1)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்