டான்சிங் ரோஸுக்கு தனிப்படம் எடுங்க! – ட்ரெண்டாகும் சார்பட்டா நடிகர்!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (10:09 IST)
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரையில் டான்ஸிங் ரோஸ் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. 1970ளில் சென்னையில் பிரபலமாக இருந்த ஆங்கில குத்துச்சண்டையை மையப்படுத்தி வெளியான இந்த படம் விமர்சன அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் அப்போதைய எமெர்ஜென்சி கால சூழல் போன்றவற்றை பதிவு செய்திருப்பதும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் துணை கதாப்பாத்திரமாக வந்த டான்சிங் ரோஸ் கதாப்பாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. எதிரணி பாக்ஸராக வரும் டான்சிங் ரோஸ் ஆடியபடி சண்டைபோடும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த டான்சிங் ரோஸ் கதாப்பாத்திரத்தை மலையாள நடிகர் சபீர் கலரக்கல் சிறப்பாக நடித்துள்ளார். இந்நிலையில் டான்சிங் ரோஸ் கதாப்பாத்திரத்தை வைத்து தனிப்படம் எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளும் சமூக வலைதளத்தில் எழுந்து வருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்