இந்நிலையில் அவர் நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பல ரசிகர்களும் ‘ஏன் இளையராஜாவின் மகனை மதம் மாற்றினீர்கள்?’ எனக் கேட்க, அதற்கு அவர் ‘ 3 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இஸ்லாமைப் பின்பற்ற ஆரம்பித்த பிறகுதான் எனக்கு அவரைத் தெரியும். மேலும் அவர் மிகப்பெரிய கேள்விகளுக்கான விடையை இஸ்லாமில் கண்டுகொண்டுள்ளார். எங்களுடைய ஒரே எண்ண அலைவரிசைகளால் நாங்கள் இணைந்திருக்கிறோம். வெறுப்பவர்கள் வெறுக்கட்டும், ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ’ எனக் கூறினார்.