இந்த படத்தில் பழைய சோனியின் ஸ்பைடர்மேன்களாக நடித்த டோபி மெக்குரே மற்றும் ஆண்ட்ரூ கார்பீல்டு ஆகியோரின் வருகையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் டோபி மெக்குரேவை வைத்து ஸ்பைடர்மேன் 4ம் பாகம் எடுக்க வேண்டும் என்றும், ஆண்ட்ரூ கார்பீல்டை வைத்து தி அமேசிங் ஸ்பைடர்மேன் 3ம் பாகம் எடுக்க வேண்டும் என்றும் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் ட்விட்டரில் படையெடுக்க தொடங்கியுள்ளனர். கிறிஸ்துமஸ் அன்று உலக அளவில் ஆண்ட்ரூ கார்பீல்டின் அமேசிங் ஸ்பைடர்மேன் 3ம் பாகம் எடுக்க வலியுறுத்தி மிகப்பெரும் ஹேஷ்டேக் ட்ரெண்டை நடத்த உலகளாவிய ஸ்பைடர்மேன் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.