இருப்பினும், இன்றைய கால இளம் நடிகர்களுக்கு கமல், நடிப்பிலும், தொழில் நுட்பத்திலும், இயக்கத்திலும் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார். இதற்கு சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ரூ.500 கோடிக்கு மேலான வசூல் தக்க சாட்சி.
இந்த நிலையில், சமீபத்தில் பாலிவுட் சினிமா நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அப்போது, அவர் கரங்களைப் பற்றிக்கொண்ட முன்னணி நடிகர் ரன்பீர் கபூர், முத்தமிட்டு தன் அன்பை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், ரன்வீர் தன் டுவிட்டர் பக்கத்தில் ஐ கான் என்று பதிவிட்டு, கமலின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.