பிரபல பாலிவுட் நடிகர் ராஜிவ் கபூர் இன்று காலாமானார். அவரது மறைவுக்கு இந்தியத் திரையுலகினர்,அரசியல்தலைவர்கள்,ரசிகர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகர் ராஜிவ் கபூர். இவர் ராம் தேதி மெய்லி, ஏக் ஜான் ஹைன் ஹம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர்.
இவர் நடிப்புப் போக பிரேம்கிரந்த் என்ற படத்தை இயக்கி பலரையும் ஆச்சர்யப்படவைத்தார்.
இவருக்கு இன்று திடீரென்று மாரடைப்பு ஏற்படவே அவரது சகோதர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அப்போது அவரது உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக் கூறிவிட்டனர்.
இன்று ராஜிவ்கபூர் தனது 58 வயதில் காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்குன் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.