கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு பிரபல நடிகர் வெற்றி

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (17:35 IST)
கடந்தாண்டு  பிரபல தொழிலதிபரும் கன்னியாகுமரி மாவட்ட எம்பியுமான வசந்தகுமார் உடல்நலக்குறைவால் காலமானார்.

எனவே அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலின்போது, கன்னியாகுமரி தொகுதிக்கும் மக்களவை இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக -காங்கிரஸ் கூட்டணி சார்பில் விஜய் வசந்த் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் முன்னால் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், 1,21,262 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்