ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர் ஜானி டெப்பின் ஓவியங்கள் பல கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட் சினிமாவில் எவர் கிரீன் படமாக அனைத்துத் தரப்பினராலும் கொண்டாடப்படுவது பைரேட்ஸ் கரீபியன். இப்படங்களின் தொடர்ச்சியான வெற்றி, இப்படத்தில் ஹீரோவாக நடித்த ஜானி டெப்புக்கு உலகளவில் அதிக ரசிகர்களை உண்டாக்கியதுடன் படமும் வசூலில் சாதனை படைத்தது.
இந்த நிலையில், சமீபத்தில் இவர் மீது இவரது மனைவி ஆம்பர் ஹர்டு பாலியல் குற்றச்சாட்டு கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வாக்கில் ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது. இதன் பின் இவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஜானி டெப் கொரொனா கால ஊரடங்கில் வரைந்த சில ஓவியங்களை பிரபல ஏல நிறுவனம் மூலம் விற்றார். இவர் வரைந்த அத்தனை ஓவியங்களும் சுமார் 28கோடிக்கு ஏலம் போயுள்ளதாக தகவல் வெளியாகிறது.
ஒரு நடிகர், பாடகர், ஓவியர் எனப் பன்முகம் கொண்ட ஜானி டெப்புக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.