நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ஜீவி 2… எந்த ஓடிடியில்? எப்போது? முழு விவரம்!

செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (15:48 IST)
நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்த ஜீவி திரைப்படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.

8 தோட்டாக்கள் படம் மூலமாக கவனம் பெற்ற நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்த ஜீவி திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்ததால் படத்தின் வசூல் மிகப்பெரிய வெற்றியாகவே கருதப்பட்டது. இந்நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி களமிறங்கியுள்ளார். முதல் பாகத்தில் பணிபுரிந்த பெரும்பாலான கலைஞர்கள் இந்த இரண்டாம் பாகத்திலும் பணியாற்றியுள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில் சமீபத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் இருக்கும் அந்த போஸ்டர் பரவலான கவனத்தைப் பெற்ற நிலையில் இப்போது ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன.

ஜீவி 2 திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆஹா தமிழ் ஓடிடியில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஜீவி 2 திரைப்படம் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்