பிரபலநடிகையும்சமூகஆர்வலருமானகஸ்தூரிசமூகவலைதளங்களில்எப்போதும், ஆக்டிவ்வாகஇருப்பவர். இவர், பிரபலயூடியூப்பிரபலம்மற்றும்சினிமாவிமர்சகர்பிரசாந்த்ரங்கசாமிக்குஎதிராகதனதுடுவிட்டர்பக்கத்தில்ஒருடுவீட்பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுகுறித்து ஒரு விவாதம் ஒரு தனியார் செய்தி சேனலில் நடைபெற்றது. இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டார். இதற்கு, ஒரு நபர் அநாகரிகமான முறையில் அவருக்கு ரீடுவீட் செய்தார். அதற்கு நடிகை கஸ்தூரி ஒரு பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில், பிரபல யூடுயூப் பிரபலம் பிரசாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கஸ்தூரி ரிப்ளை செய்த டுவீட்டை ஸ்கீரின் சாட் எடுத்து, கஸ்தூரியின் மகள் குறித்து அநாகரிகமான முறையில் ஒரு டூவீட் பதிவிட்டுள்ளார்.
அந்த டுவீட்டைப் பார்த்த நடிகை கஸ்தூரி, என் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது… பிரசாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டுவிட்டர் இந்தியா மற்றும் சென்னை போலீஸுக்கு அந்த டுவீட்டை டேக் செய்திருந்தார்.
Twitter -ல் ஃபேக் ஐடி…நடிகை கஸ்தூரியிடம் மன்னிப்பு கேட்ட ’யூடியூப் பிரபலம் ’!
இந்த நிலையில், யூடியூப் பிரபலம் பிரசாந்த், அந்த டூவிட் பதிவிட்டுள்ளது, ஃபேக் ஐடி... 'என்னை மன்னித்துவிடுங்கள்' எனவும் நடிகை கஸ்தூரிக்கு பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.