உலகப் பணக்காரர்களில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி உலகம் முழுவதும் பிரபலம் ஆனவர் எலான் மஸ்க். சமீபத்தில் கூட சமூக வலைதளமான ட்விட்டரை மஸ்க் வாங்கியது முதலாக அவரது செயல்பாடுகள் உலக அளவில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. ட்விட்டரை வாங்கியதும் அதன் முக்கிய பொறுப்பு அதிகாரிகளை பணியை விட்டு தூக்கிய எலான் மஸ்க், ட்விட்டரில் ப்ளூடிக் பெறுவதற்கு மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் 650 ரூபாய்) கட்டணமாக செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் பிறந்த எலான் மஸ்க் எப்படி அமெரிக்காவுக்கு வந்து உலகப் புகழ்பெற்ற பணக்காரர் ஆனார் என்ற வாழ்க்கை வரலாற்றை சமீபத்தில் அமெரிக்க எழுத்தாளர் வால்டர் ஐசக்சன் புத்தகமாக எழுதி வெளியிட்டார். இந்த புத்தகம் பரவலான கவனத்தைப் பெற்ற நிலையில் இப்போது அந்த புத்தகத்தை மையப்படுத்தி திரைப்படம் உருவாக உள்ளது.