ஏழு கடல் ஏழு மலை படத்தில் இப்படியெல்லாம் காட்சிகள் இருக்கா?.. லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
சனி, 8 ஜூலை 2023 (07:35 IST)
இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிப்பில் ஏழு மலை ஏழு கடல் என்ற படம் உருவாகி வருகிறது. இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

இந்த படத்தில் சுமார் 90 நிமிடக் காட்சிகளில் கிராபிக்ஸ் பணிகள் இடம்பெறும் என சொல்லப்படுகிறது. அதுதான் படத்தின் ரிலீஸ் தாமதத்துக்குக் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸுக்கு நல்ல டிமாண்ட் உள்ளதாகவும், டிஸ்னி மற்றும் சோனி லிவ் ஆகிய தளங்களோடு நல்ல விலைக்கு விற்க பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது படம் பற்றி வெளியாகியுள்ள தகவலின் படி படத்தில் விலங்குகள் அதிகளவில் பயன்படுத்தப் பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் விலங்குகள் பேசிக் கொள்வது போல பேண்டசியான விசயங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்