பிக்பாஸ் 2 ஷீட்டிங்கில் ஃபெப்சி ஊழியர்கள் தகராறு

வெள்ளி, 22 ஜூன் 2018 (19:02 IST)
பிக்பாஸ் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று ஃபெப்சி ஊழியர்கள் தகராறு செய்ததால் கமல் கலந்து கொண்ட படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.

 
பிக்பாஸ் சீசன் 1 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது பிப்க்பாஸ் 2 ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி.யில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
 
நிகழ்ச்சியில் கமல் பங்கேற்கும் காட்சிகளும் இங்குதான் படப்பிடிப்பு நடைபெறுகிறது. கமல் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஃபெப்சி ஊழியர்கள் உள்ளே நுழைந்து பிரச்சனை செய்தனர்.
 
தமிழகத்தில் நடைபெறும் அனைத்து படப்பிடிப்புகளுக்கு தங்களது ஊழியர்களை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். நிகழ்ச்சி தயாரிப்பாளர் குழு பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்