சிவகார்த்திகேயனின் ‘டான்’ புதிய ரிலீஸ் தேதியை முடிவு செய்த படக்குழு!

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (18:49 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘டான்’ 
 
இந்த படம் மார்ச் 25ஆம் தேதி ரிலீஸாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் லைகா ரிலீஸ் செய்யும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அதே தினத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ‘டான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்த நிலையில் ‘டான்’  திரைப்படத்தை மே மாதம் 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், ஷிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பாலசரவணன், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்