ஐதராபத்தில் நடிகை காஜல் அகர்வால் அளித்த பேட்டியில் இன்றைய இளைஞர்கள் நிறையபேர் காதல் வயப்படுகிறார்கள்.
அவர்கள் வாழ்க்கையும் காதலோடுதான் நகர்கிறது. ஆனால் எல்லா காதலும் வெற்றிபெற்று திருமணத்தில் முடிவதில்லை.
காதலில் தோல்வி அடைந்தால், வாழ்க்கையே முடுந்துவிட்டதாக அர்த்தமில்லை. அவர்கள் மீண்டு புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும். காதலிப்பது இயற்கையானது. ஆனால் எல்லா காதலும் திருமணம் வரை செல்வது இல்லை. சமூக பிரச்சனைகள், பெற்றோர்களின் எதிர்ப்புகள், வேறு காரணங்கள் காதலுக்கு தடையாக நிற்கின்றன.
காதலிப்பதும் காதலில் தோல்வி அடைவதும் சகஜமானதுதான். காதலில் விழுந்தால் கூட நாம் யார் என்பதை மறக்க கூடாது. நமது தனித்தன்மையை இழக்கவும் கூடாது. நம்முடைய முக்கியத்துவத்தை எந்த விகிதத்திலும் காதல் குறைத்து விடக்கூடாது. காதலன் காதலிதான் உலகம் என்றும் வாழக்கூடாது.
நான் இப்போது யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு திருமணம் நடப்பதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.