தீபாவளிக்கு மோதும் கொடி மற்றும் காஷ்மோரா!!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2016 (13:02 IST)
தீபாவளிக்கு இன்றைய தேதியில் 5 படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொடி, காஷ்மோரா, சைத்தான், கத்திச் சண்டை மற்றும் கடவுள் இருக்கான் குமாரு. ஆனால், சமீபத்திய நிலவரம், இந்த ஐந்தில் மூன்று படங்கள் தீபாவளிக்கு பிறகே வெளியாகும்.
 
இந்நிலையில் தற்போது கொடி மற்றும் காஷ்மோரா திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நேருக்குநேர் மோதவுள்ளன. கொடி மற்றும் காஷ்மோரா படங்களின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. முதன் முதலாக இரட்டை வேடத்தில் தனுஷ் நடித்துள்ளதால் கொடிக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அரசியல்வாதி கெட்டப்பும் மாஸாக இருந்ததால் கொடிக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
 
அதே போன்று வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடிக்கும் கார்த்தி காஷ்மோராவில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். அதிலும் காஷ்மோரா கேரக்டர் மிரட்டலாகவும், புதுமையாகவும் உள்ளது. இந்த இரண்டு படங்களுக்கு இடையே கடு்ம் போட்டி நிலவும் என கருதப்படுகிறது. இதில் எந்த படம் முந்தப்போகிறது என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.
அடுத்த கட்டுரையில்