லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்திசுரேஷ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்த சண்டக்கோழி2 நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தை நாளை வெளியிட மாட்டோம் என வினியோகஸ்தர் சங்கம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், புதிய படங்களை தியேட்டர்களில் திருட்டுத்தனமாக வீடியோ எடுப்பது தொடர்பாக, 10 தியேட்டர்களுக்கு புதிய படங்கள் திரையிட விஷால் தடை விதித்தார். இதனால், சில தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த வினியோகஸ்தர்கள் சங்கத்தினர், எங்களிடம் ஆலோசனை செய்யாமல் விஷால் தன்னிச்சையாக இந்த முடிவெடுத்துள்ளார். எனவே, நாளை சண்டக்கோழி2 படத்தை வெளியிடக்கூடாது என முடிவெடுத்துள்ளோம் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.