ஆண்தேவதை பட இயக்குனர் கொரோனாவால் உயிரிழப்பு! – திரையுலகினர் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (09:35 IST)
தமிழில் சமுத்திரக்கனி நடிப்பில் ஆண்தேவதை படத்தை இயக்கிய இயக்குனர் தாமிரா கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் ரெட்டைச்சுழி, சமுத்திரக்கனி நடித்த ஆண் தேவதை போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் தாமிரா. கடந்த சில தினங்கள் முன்னதாக கொரோனா தொற்று உறுதியானதால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. கொரோனாவுக்கு தமிழ் இயக்குனர் ஒருவர் பலியான சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்