அழகான, அர்த்தமுள்ள "சில்லுக்கருப்பட்டி" - இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

Webdunia
வியாழன், 2 ஜனவரி 2020 (12:15 IST)
‘பூவரசம் பீப்பீ’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர், இயக்குநர் ஹலிதா ஷமீம். அந்த படத்தை தொடர்ந்து ‘சில்லுகருப்பட்டி’ என்ற அந்தாலஜி ஸ்டைல் படத்தை இயக்கியிருந்தார். நேற்று வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வசூலில் சாதனை படைத்தது வருகிறது. 
இப்படத்தில் நடிகர் சமுத்திரகனி மற்றும் சுனைனா நடித்திருந்தனர். இவர்களுடன் சாரா அர்ஜுன், நிவேதிதா சதீஷ், மணிகண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன் ராமானுஜன், யாமினி மூர்த்தி, விஜய் கார்த்திக் என திறமை மிக்க நான்கு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றியுள்ள இப்படம்  நான்கு விதமான காதல் கதைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.  இப்படம் சென்னை இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த படங்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தை பாராட்டி இயக்குனர்  ஷங்கர்  "சில்லுருப்பட்டி - அழகான, அர்த்தமுள்ள, இனிமையான, புதிய, விவேகமான மற்றும் அன்பான படம். காயமடைந்த காகம், ஆமை நடை, நிழல் முத்தம், அலெக்சா ஆகியவை மறக்க முடியாத கவிதை. சிறந்த பணி இயக்குனர் ஹலிதா ஷமீம்.  தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் சீயர்ஸ் என கூறி வெகுவாக பாராட்டி ட்விட்டர் பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்