பாஜகவில் சேர மாட்டேன், சாகும் வரை நான் அதிமுக தொண்டன் தான்: சத்யராஜ் பட இயக்குனர் அறிக்கை

ஞாயிறு, 7 ஜூன் 2020 (19:41 IST)
தமிழ் திரையுலகில் மசாலா படங்கள் மற்றும் நகைச்சுவை படங்களை இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் சக்தி சிதம்பரம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுகவில் இணைந்த நிலையில் சமீபத்தில் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்ததால் பாஜகவில் இணைய இருப்பதாக வதந்தி கிளம்பியது 
 
இதனை அடுத்து அவர் இது குறித்து விளக்கமளித்துள்ளார். சாகும் வரை நான் அதிமுக தொண்டனாக இருப்பேன் என்றும் வேறு எந்த கட்சிக்கும் செல்ல மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
நான்‌ திரு.பொன்‌.ராதாகிருஷ்ணன்‌ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது எடுத்த புகைப்படங்கள்‌ வலைத்தளங்களில்‌ வெளியானது எனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பாஜகவில் சேரப்போவதாக வெளிவந்த தகவல்‌ முற்றிலும்‌ தவறானது. நான்‌ 'பேய்மாமா' பட ஷூட்டிங்கிற்காக கேரளாவில்‌ சில மாதங்கள்‌ தங்கியிருந்த காரணத்தால்‌ இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. அதோடு *கொரோனா வைரஸ்‌ தொற்று' தடைக்‌ காலம்‌ தொடர்ந்து நீடிக்கப்பட்டதாலும்‌ எனது மறுப்பு அறிக்கையை வெளியிட தாமதமானது.
 
நான்‌ புரட்சி தலைவர்‌ கொள்கைகளில்‌ ஈர்க்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மாவின்‌ பொற்கரங்களால்‌ அடிப்படை உறுப்பினர்‌ அட்டை பெற்று, இன்றைக்கு மாண்புமிகு தமிழக முதல்வர்‌ திரு.எடப்பாடி பழனிசாமி, மாண்புமிகு துணைமுதல்வர்‌ திரு.ஓ.பன்னீர்செல்வம்‌ ஆகியோரின்‌ வழிகாட்டுதலின் படி, 'எனது உயிர்‌ மூச்சு இருக்கும்‌ வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டனாகவே தொடர்ந்து
பணியாற்றுவேன்‌' என்ற நிலைப்பாட்டை இதன்‌ மூலம்‌ உறுதியளிக்கிறேன்‌” என்று கூறினார்‌.
 
இவ்வாறு இயக்குனர் ஷக்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்