தன் மனைவியை மதம் மாற்றினாரா விஜய் ? எஸ் ஏ சி பதில் !

Webdunia
வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (11:54 IST)
விஜய் தன் மனைவியுடன்

விஜய் சமீபகாலமாக கிறிஸ்துவ ஏஜெண்டுகளின் மூலம் மதத்தைப் பரப்ப முயல்வதாக செய்திகள் வெளியானது குறித்து அவரது தந்தை எஸ் ஏ சி விளக்கமளித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது விஜய் கிறிஸ்துவ மதமாற்றத்துக்கு உதவும் வகையில் செயல்படுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எஸ் ஏ  சி‘நான் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவன். அதற்காக நான் என் மதத்தை தவிர மற்ற மதங்கள் தாழ்ந்தவை என சொல்ல மாட்டேன். என்னிடம் பணியாற்றிய உதவியாளர்கள் ஒருவர் கூட கிறிஸ்துவர் கிடையாது. திறமை இருந்தால் நான் அவர்களை சேர்த்துக் கொள்வேன்.

இன்று வரை என் மனைவியின் பூஜை அறையில் அவருடைய சுதந்திரத்தை நான்கு தடுத்தது கிடையாது. அதே போல விஜய் தன் மனைவியை மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாக சொல்கிறார்கள். சங்கீதாவுக்கு தாலி கட்டி இந்து முறைப்படி தான் திருமணம் நடந்தது. கிறிஸ்துவ முறையில் என்று சொல்வது எல்லாம் பொய்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்