சூர்யா நடிப்பில் தான் இயக்குவதாக இருந்த அருவா படத்தின் நிலைமை என்னவென்றே தெரியாத நிலையில் தனது மனைவியின் தம்பி அருண் விஜய்க்கு கதை தயார் செய்து வருகிறார் இயக்குனர் ஹரி.
சில மாதங்களுக்கும் முன்னதாக சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளவுள்ளதாகவும், இந்த படத்திற்கு ‘அருவா’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஸ்டுடியோ கிரின் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு நாயகியாக ராஷி கண்ணா நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த பட்ம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் இப்போது சூர்யா வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிப்பதற்கே ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் இப்போது அருவா படம் தொடங்க வாய்ப்பில்லை என்பதால் ஹரி தனது மைத்துனர் அருண் விஜய்க்காக ஒரு ஆக்ஷன் கதையை தயார் செய்து வருகிறார். அருவா படம் தாமதமானால் உடனடியாக அந்த படத்தை இயக்க இருக்கிறாராம்.