குறும்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் ஹரியின் மகன்!

vinoth
புதன், 3 ஏப்ரல் 2024 (10:46 IST)
தமிழ் சினிமாவில் சாமி, ஆறு, சிங்கம், தாமிரபரணி என வரிசையாக பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் ஹரி. சமீபகாலமாக அவருக்கு ஒரு தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது விஷாலை வைத்து அவர் ரத்னம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் அவருக்கு கம்பேக்காக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் ஹரியின் மூத்த மகனான ஸ்ரீராம் ‘HUM’ என்ற குறும்படத்தை இயக்கி அதில் நடித்தும் உள்ளார். இதன் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். ஏற்கனவே அவர் ரத்னம் மற்றும் துப்பறிவாளன் 2 ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குறும்படம் சுமார் ஒரு மணிநேரம் ஓடும் விதமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஸ்ரீராமே முதன்மை வேடத்தில் நடிக்க, சஞ்சய் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் கார்மெலஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்