மீண்டும் இணையும் ‘குற்றம் 23’டீம்

வியாழன், 5 டிசம்பர் 2019 (20:30 IST)
ஈரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘குற்றம் 23’ என்ற திரைப்படம் நல்ல ஹிட்டாகிய நிலையில் அதேபோல் மீண்டும் ஒரு சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் கலந்த ஒரு திரைப்படத்திற்காக அறிவழகன் - அருண்விஜய்  வெற்றி கூட்டணி மீண்டும் புதிய படம் மூலம் இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அறிவழகம் இயக்கத்தில் ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் விஜய ராகவேந்திரா தயாரிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் பூஜையுடன் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு  சென்னை, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும், இம்முறையும் ஸ்பை ஆக்‌ஷன் திரில்லர் கலந்த ஒரு திரைப்படத்தை உருவாக்க இயக்குனர் அறிவழகன் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா நடிக்க இருப்பதாகவும், மற்ற நடிகர்கள் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தில் ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யவிருப்பதாகவும், இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்