சூர்யா என்னைவிட சீனியர்... அவருடன் இணைந்து நடிக்க ஆவலாக உள்ளேன் - இயக்குனர் அமீர்

vinoth
செவ்வாய், 30 ஜனவரி 2024 (08:18 IST)
நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் தோல்விக்குப் பிறகு தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துள்ள நிலையில்  அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது.

இதையடுத்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பருத்திவீரன் படப்பிரச்சனைக் காரணமாக இருவருக்கும் இடையே ஒரு விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் இருவரும் இணைந்து நடிப்பார்களா எனக் கேள்வி எழுந்தது. ஆனால் இருவரும் இணைந்து நடிப்பார்கள் என வெற்றிமாறன் தரப்பு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் சூர்யாவோடு இணைந்து நடிப்பது குறித்து பேசியுள்ளார் அமீர்.

அதில் “ஒரு நடிகராக சூர்யாவின் வளர்ச்சியின் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டி ஒரு கலைஞராக அவரை நான் அவரை நான் ரசிக்கிறேன். அவரோடு இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். நடிப்பில் அவர் என்னைவிட சீனியர். அதனால் அவர் சிறப்பாகவே நடிக்க முயற்சி செய்வார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்