விஜய் தன் தந்தை எஸ்.ஏ.சியுடன் சேர்ந்தாரா?

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (17:32 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இன்று மாலை6 மணிக்கு இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகிறது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் விஜய்67 படத்தில் நடிக்கவுள்ளது இந்திய சினிமாவில் பேசு பொருளாகியுள்ளது.

இந்த நிலையில் கடந்தாண்டு தேர்தலுக்கு முன்பு நடிகர் விஜய்க்கு தெரியாமல் அவரது பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்த அவரது தந்தை எஸ்.ஏ,சந்திரசேகருக்கும் அவருக்கும்ம் இடைய கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

இதனால் இருவரும் தனித்தனியே பிரிந்து வசிப்பதாக தகவல் வெளியானது. பீஸ்ட் படம் குறித்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய விஜய், தன் தந்தையைப் புகழ்ந்து பேசினார்.

இதையடுத்து, எஸ்.ஏ,சி  நடிகர் விஜயுடன் போனில் தொடர்ந்து கொண்டு பேசி இருவரும் கருத்துவேறுபாடு கலைந்து மீண்டும்  ஒன்று சேர்ந்ததாக ஒரு தகவல் வெளியான நிலையில் அது வதந்தி எனக் கூறப்படுகிறது.  அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என சினிமா வட்டாரத்தில் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்