ரஜினிகிட்ட நான் பேசிக்கிறேன்… நீங்க கதையை ரெடி பண்ணுங்க- லோகேஷுக்கு கமல் நம்பிக்கை!

vinoth

வியாழன், 25 செப்டம்பர் 2025 (12:38 IST)
தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளாக மிகப்பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். இருவரும் தங்கள் கெரியர் தொடக்கத்தில் ஒன்றாக இணைந்து இளமை ஊஞ்சலாடுகிறது, அவள் அப்படிதான் என பல படங்களில் நடித்திருந்தாலும் பின்னர் பிரிந்து தனித்தனி வழியில் பயணிக்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் 45 ஆண்டுகளாக இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

ஆனால் அவர்கள் மீண்டும் இணைந்து ஒரு படம் நடிக்கவேண்டும் என்பது தமிழ் சினிமா ரசிகர்களின் தீராத ஆசையாக இருந்தது. இந்நிலையில்  ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நீண்ட காலம் கழித்து படம் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியான நிலையில் ‘கமலுடன் இணைந்து நடிக்க ஆசை உள்ளது. ஆனால் நல்ல கதையும் இயக்குனரும் அமையவேண்டும்’ எனக் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

முதலில் இந்த படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் ‘கூலி’ படத்தின் நெகட்டிவ் விமர்சனம் மற்றும் ட்ரோல்களால் அந்த படத்தை லோகேஷ் இயக்கவேண்டாம் என்ற முடிவை ரஜினிகாந்த் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் லோகேஷ் மேல் நம்பிக்கை வைத்துள்ள கமல்ஹாசன் அவருக்கு ஒரு அலுவலகம் போட்டுக்கொடுத்து திரைக்கதை எழுத சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த திரைக்கதை நல்லபடியாக வரும்பட்சத்தில் ரஜினியிடம் பேசி அவரை சம்மதிக்கவைக்கலாம் என்ற முடிவில் கமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்