பிரதீப் ரங்கநாதனின் லைக்' Vs 'டூட்' இரண்டுமே தீபாவளி ரிலீஸா? விட்டு கொடுக்க மறுக்கும் தயாரிப்பாளர்கள்..!

Siva

செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (18:22 IST)
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'லைக்' படம் தீபாவளிக்கு வராது என்று பேசப்பட்டு வந்த நிலையில், இப்போது அப்படத்தின் ரிலீஸ் தீபாவளிக்கு கன்பார்ம் என்று கூறப்படுகிறது. 'லைக்' படக்குழு அக்டோபர் 6-ம் தேதி சென்சார் செய்ய விண்ணப்பித்துள்ளதாம்.
 
விக்னேஷ் சிவன் இயக்கிய 'டூட்' படமும் தீபாவளிக்கு வருவதில் உறுதியாக உள்ளது. அவர்களும் அக்டோபர் 4-ம் தேதி சென்சாருக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனாலும் இரு படக்குழுக்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
 
'லைக்' படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.100 முதல் ரூ.130 கோடி வரை இருக்கும். இவ்வளவு பெரிய பட்ஜெட் படம், ஒரு பண்டிகை நாளில் வந்தால் மட்டுமே வசூலை ஈட்ட முடியும். மேலும், படம் ஆரம்பித்து வெகுநாட்களாகிவிட்டதால் வட்டி அதிகமாகிறது.
 
ஆனால், 'டூட்' பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ்,  எங்கள் படமும் நிச்சயம் தீபாவளிக்கு வந்தாக வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்களாம்.
 
இந்த இரண்டு பெரிய படங்களும் தீபாவளியில் மோதவிருப்பது உறுதிபோல தெரிகிறது. இந்த பஞ்சாயத்து எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை. தீபாவளி அன்றுதான் எந்தப் படம் வருகிறது என்பது தெரியும்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்