கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல பிரச்சனைகளைக் கடந்து நவம்பர் 24 (நேற்று) ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளரும் பைனான்சியருமான கே ராஜன் “துருவ நட்சத்திரம் இவ்வளவு முறை ரிலீஸ் தேதி அறிவித்தும் ரிலீஸ் ஆகாமல் தவித்து வருகிறது. அதற்குக் காரணம் அந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான கௌதம் மேனனுக்கு 60 கோடி ரூபாய் கடன் இருப்பதுதான். இது சம்மந்தமான வழக்கு திரைப்பட சங்கத்தில் உள்ளது” எனக் கூறியுள்ளார்.