விஜய் சேதுபதி- மிஸ்கின் இணையும் 'டிரெயின்' பட அப்டேட்

வெள்ளி, 1 டிசம்பர் 2023 (12:32 IST)
தமிழ் சினிமாவின்  பிரபல நடிகர் விஜய்சேதுபதி.இவர் தென்மேற்கு பருவக் காற்று, செக்கச் சிவந்த வானம், விக்ரம் வேதா, மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  இவரது    51 வது பட ஷூட்டிங் நேற்றுடன் நிறைவடைந்தது. இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியனது.
 
இந்த நிலையில், விஜய் சேதுபதியின் அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது.ஏற்கனவே இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியானது.
 
இருவரும் இணைந்து பணியாற்றுவது உறுதியான நிலையில், இப்படத்திற்கு டிரெயின் என டைட்டில் வைத்துள்ளனர்.
 
புதிய படத்தில் முதல் லுக் போஸ்டர்  நேற்று வெளியாகி வைரலான நிலையில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகவுள்ள இப்பட ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
 
இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்