சென்னை கிங்ஸ்-ன் இதயத்துடிப்பே தோனி தான்….பயிற்சியாளார் புகழாரம்…

சனி, 17 ஏப்ரல் 2021 (19:23 IST)
ஐபிஎல் 14வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.நேற்று  சென்னை அணியுடன் பஞ்சாப் அணி மோதியது. இதில் சென்னை அணி அபார எவ்ற்றி பெற்றுள்ளது.
 
முதல் போட்டியில் தோல்வி என்பதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை இருந்தது.
 
பஞ்சாப் அணி 106 ரன்கள் எடுத்து 107 ரன்களை சென்னை அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
 
அடுத்து வந்த சென்னை அணி 15.3 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்த இலக்கை அடித்து வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் கடைசி இடத்தில் இருந்த சென்னை அணி இந்த ஒரே போட்டியில் ஜெயித்ததன் வாயிலாக 2 வது இடத்திற்கு முன்னேறியது. இதனால் சென்னை அணியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
இதுகுறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் கூறியதாவது:
 
சிஎஸ்கே அணியின் இதயத்துடிப்பாக தோனி  உள்ளார். அவரது வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையில்தான் அணி வெற்றி பெறுகிறது.  நேற்றைய 2 வது ஆட்டத்தில் சென்னை அணியின் வெற்றியை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.அடுத்த போட்டியில் சென்னை அணி நன்றாக விளையாடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்