“தளபதி 68 படம் இந்த ஜானரில்தான் இருக்கும்…” – அர்ச்சனா கல்பாத்தியின் பதிவு!

செவ்வாய், 3 அக்டோபர் 2023 (15:22 IST)
பிகில் படத்துக்குப் பிறகு விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை  வெங்கட் பிரபு இயக்க  உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

நேற்று படத்தின் பூஜை நடந்த நிலையில் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு படத்தின் அப்டேட்கள் வெளியாகும் என அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா பூஜைக்குப் பிறகு “உங்கள் அனைவரின் அன்பாலும் எங்களின் 25 ஆவது படத்தை தளபதி விஜய்யுடன் தொடங்கியுள்ளோம். படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய விவரம் லியோ படத்துக்குப் பிறகு அறிவிக்கப்படும். தளபதி 68 படம் ஒரு உயர்தர ஆக்‌ஷன் படமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்