சொர்க்கத்தை உயிரோடு ஒரு நொடியில் உணர்ந்தேன் - தர்ஷா குப்தா!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (16:22 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
 
குறிப்பாக குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற புகழ், ஷிவாங்கி உள்ளிட்டோர் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும், புகழ் அருண்விஜய் மற்றும் சந்தானம் படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கும் தர்ஷா குப்தா கொரோனா ஊரடங்கில் பசியுற்றோருக்கு உணவளித்து உதவியுள்ளார். அந்த போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு, "பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுத்து பாருங்கள் நீங்கள் இறந்தபின் காணும் சொர்க்கத்தை ஒரு நொடிப் பொழுதில் காணமுடியும். " என கூறி பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்