ஒரே சந்திரன் ஒரே சூரியன் ஒரே சூப்பர்ஸ்டார்: ரஜினியிடம் ஆசி பெற்ற பிக்பாஸ் நடிகர்

Webdunia
செவ்வாய், 26 நவம்பர் 2019 (20:44 IST)
இதுவரை நடைபெற்ற மூன்று பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அனேகமாக திரையுலகில் ஓரளவு கேட்கும் வாய்ப்புகளை பெற்றவர் நடிகர் ஹரீஷ் கல்யாணாகத்தான் இருக்கும் பிக்பாஸ் சீசனின் டைட்டிலை வென்ற ஆரவ், ரித்விகாவுக்கு கூட இன்னும் ஒரு திரைப்படம் கூட வெளியாகாத நிலையில் ஏற்கனவே இரண்டு படங்கள் வெளியாகி இரண்டும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ’தனுசு ராசி நேயர்களே’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் ஹரிகிருஷ்ணன்
 
இந்த படத்தின் இசை புரமோஷன் விழா ஒன்று சென்னையில் இன்று நடைபெற்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை ’தனுசு ராசி நேயர்களே’ படக்குழுவினர் நேரில் சந்தித்து ஆசிபெற்றனர் 
 
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் ஹீரோ ஹரிஷ் கல்யாண், இயக்குனர் சஞ்சய் பாரதி அவரது தந்தையும் நடிகரும் இயக்குனருமான சந்தானபாரதி உள்பட படக்குழுவினர் ரஜினி வீட்டில் அவரை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றனர் 
 
இதுகுறித்து ஹரிஷ் கல்யான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது ’ஒரே சந்திரன் ஒரே சூரியன் ஒரே ஸ்டார். தலைவரிடம் ஆசி பெற்ற போது... இந்த சந்திப்பு எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு சந்தோசமான சந்திப்பு என்று கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்