எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை... "ஜகமே தந்திரம்" OTT ரிலீசுக்கு ஓகே சொன்ன தனுஷ்!

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (08:20 IST)
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் உருவாகி வருகிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளிவந்த இப்படத்தின் போஸ்டர், பாடல்கள் என அனைத்தும்  ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இந்த படத்தை ஓடிடி பிளாட்பார்மில் நேரடியாக ரிலிஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

65 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் கொரோனா சூழலில்  இன்னும் 6 மாதங்களுக்கு தியேட்டரில் ரிலீஸ் ஆகி வசூல் குவிக்க வாய்ப்பே இல்லை என்று தயாரிப்பு தரப்பு தனுஷிடம் கூறியுள்ளது. அதற்கு அவர்,  ஓடிடி-யில் நேரடியாக வெளியாவதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என கூறிவிட்டதால் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெளியாகப்போகும் பெரிய நடிகரின் படம் இதுவாக தான் இருக்கும். கூடிய விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்