50வது படம் அவரது இயக்கத்தில் தான் நடிப்பேன் - ஒற்றை காலில் நிற்கும் தனுஷ்!

வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (13:22 IST)
தமிழ் சினிமாவில் நடிகர் , இயக்குனர் , தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டு சிறந்து விளங்கி வருபவர் நடிகர் தனுஷ். இவர் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார்.

2002ம் ஆண்டு வெளியான இப்படத்தில் அவரது தோற்றம் குறித்தும் , நடிப்பு குறித்தும் அவமதிக்கப்பட்டார். ஆனாலும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து சுள்ளான் , புதுப்பேட்டை , காதல் கொண்டேன், பொல்லாதவன், அசுரன் என பல வெற்றிப்படங்களை கொடுத்தார். அத்துடன் பாலிவுட்டில் ராஞ்சனா படத்தின் மூலம் அறிமுகமாகி அங்கும் ஹிட் கொடுத்தார். பின்னர் அங்கு தனது இரண்டாவது படமே அமிதாப் பச்சனுடன் " சமிதாப்" என்ற படத்தில் நடித்து புகழ்பெற்றார்.

அதையடுத்து "The Extraordinary Journey of the Fakir" என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தார். இந்நிலையில் தனுஷ் தனது 50- படத்தை வெற்றிமாறன் தான் இயக்கவேண்டும் என ஒற்றை காலில் நிற்கிறாராம். காரணம் அவர்களது கூட்டணி ஒரு மேஜிக்கல் ஹிட் டீம் என்றே சொல்லலாம் தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கிய அசுரன் , வடசென்னை , ஆடுகளம் , பொல்லாதவன் என நான்கு படங்களும் மெகா ஹிட் அடித்தது. வெற்றிமாறன் தனுஷுக்கு ராசியான இயக்குனர் என்பதால் இந்த முடிவில் உறுதியாக நிற்கிறார். ஆக தனுஷின் 50வது படம் நிச்சயம் தரமான சம்பவமாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்