அமெரிக்காவில் முன்னணி நிறுவனத்தால் வெளியிடப்படும் தனுஷ் படம்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2022 (08:29 IST)
தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். ஏற்கனவே சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் என அடுத்தடுத்து நடந்த படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறைவுற்றது.

இதையடுத்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியீடு சென்னையில் நடந்தது.

இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையை ஐங்கரன் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. அந்த நிறுவனத்திடம் இருந்து அமெரிக்க வெளியீட்டு உரிமையை ப்ரைம் மீடியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனம்தான் விக்ரம் திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்