அவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் நெட்பிளிக்ஸ் திரைப்படமான தி கிரே மேன் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ள நான்கு முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர் என்ற அறிவிப்பு வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தனுஷ், தன்னை இந்த படத்தில் தேர்வு செய்ததற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டு இந்த படம் தனக்கு ஒரு அபூர்வமான அனுபவமாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் உலகம் முழுவதும் உள்ள தனக்கு ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்றும் அவர் தெரிவித்து இருந்தார்
இந்த நிலையில் சூர்யா, கீர்த்திசுரேஷ் உள்பட பல முன்னணி நடிகர்கள், நடிகைகளும் தமிழ் திரையுலகில் உள்ள ஒட்டுமொத்த பிரபலங்களும் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தமிழ் நடிகர் ஒருவர் ஹாலிவுட் படம் ஒன்றில் அதுவும் அவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் படத்தில் நடிப்பது என்பது மிகப்பெரிய விஷயம் என்றும் வாழ்த்துக்கள் குவிந்து வந்தது
மேலும் கோடிக்கணக்கான தனுஷ் ரசிகர்களும், அவரது டுவிட்டர் பக்கத்தை ஃபாலோ செய்யும் சுமார் 10 மில்லியன் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை இன்று காலை முதல் தொடர்ந்து தெரிவித்து வந்தனர் இந்த நிலையில் சற்று முன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி என்று குறிப்பிட்டு உள்ளார். தனுஷ் தெரிவித்த இந்த நன்றி டுவிட்டால் ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
வாழ்த்திய அனைத்து அன்பு
உள்ளங்களுக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றி