போயஸ் கார்டனில் வீடு கட்டியது இவ்வளவு சர்ச்சை ஆகும் என தெரியாது… சிறு வயது ஆசையை சொன்ன தனுஷ்!

vinoth

திங்கள், 8 ஜூலை 2024 (07:53 IST)
தனுஷ், தனது 50 ஆவது படமான ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தை தனுஷே இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் ஜூலை 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஏற்கனவே ரஹ்மான் இசையில் இரண்டு சிங்கிள் பாடல்கள் ரிலீஸ் ஆன நிலையில் தற்போது ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ் படக்குழுவினர் அனைவரையும் பற்றி பேசிவிட்டு போயஸ் கார்டன் ஏரியாவில் தான் புதிதாகக் கட்டியிருக்கும் வீடு பற்றி பேசியுள்ளார்.

அவரது பேச்சில் “நான் யாருடைய ரசிகர் என்பது அனைவருக்குமே தெரியும். எனக்கு 16 வயது இருக்கும் போது ஒருநாள் போயஸ் கார்டன் தெருவுக்குள் போனேன். அப்போது ரஜினி சாரின் வீட்டை பார்த்து வியந்தேன். அதற்கு மறுபுறம் ஜெயலலிதா அம்மாவின் வீடு. இந்த இரண்டு வீட்டையும் பார்த்துவிட்டு இந்த பகுதியில் ஒரு சிறிய வீட்டையாவது வாங்கிவிடவேண்டும் என நினைத்தேன். அந்த சிறுவன் வெங்கடேஷ் பிரபுவின் ஆசைதான் இப்போது நனவாகியுள்ளது. ஆனால் அந்த வீடு இவ்வளவு சர்ச்சைகளைக் கிளப்பும் என தெரிந்திருந்தால் அங்கு நான் வீடு கட்டியிருக்கவே மாட்டேன். நான் யார் என்பது என் அப்பா அம்மாவுக்கும், அந்த சிவனுக்கும் தெரியும். என் மனசாட்சி பேச ஆரம்பித்தால் அது ஆபத்தில் முடிந்துவிடும்.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்