குடும்ப விழாவில் கலந்துகொண்ட தனுஷ்!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (17:52 IST)
நடிகர் தனுஷ் தனது அண்ணன் மனைவி கீதாஞ்சலியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இயக்குனரும் இப்போது புதிதாக நடிகர் அவதாரம் எடுத்துள்ளவருமான செல்வராகவன் தன்னுடைய உதவியாளரான கீதாஞ்சலியை திருமணம் செய்துகொண்டார். அந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று கீதாஞ்சலியின் 35 ஆவது பிறந்தநாளை செல்வராகவன் தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டார். அது சம்மந்தமாக இணையத்தில் வெளியான புகைப்படங்கள் இப்போது கவனத்தை ஈர்த்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்