வாழ்நாளில் சில பாத்திரங்கள்தான் இப்படி அமையும்… 18 ஆண்டுகள் நிறைவு செய்த புதுப்பேட்டை குறித்து தனுஷ்!

vinoth

திங்கள், 27 மே 2024 (07:38 IST)
இயக்குனர் செல்வராகவனின் சமீபத்தைய படங்களான என் ஜி கே மற்றும் நானே வருவேன் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. அடுத்து அவர் தன்னுடைய எவர்க்ரீன் ஹிட் படமான 7ஜி ரெயின்போ காலணி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அந்த படம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அவரின் பழையப் படங்களான புதுப்பேட்டை, காதல் கொண்டேன் மற்றும் 7 ஜி ரெயின்போ காலணி உள்ளிட்ட படங்களை இன்றளவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதுப்பேட்டை திரைப்படம் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை ரசிகர்கள் நினைவுகூர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள தனுஷ், “ஒரு நடிகருக்கு திரைப்பயணத்தில் சில பாத்திரங்கள் மட்டுமே அழுத்தமாக அமையும். அப்படி எனக்கு அமைந்ததுதான் கொக்கி குமார் கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்த இயக்குனர் செல்வராகவனுக்கு நன்றி. நான் அந்த பாத்திரத்தை என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செய்யவேண்டும் என நினைத்தேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்